செல்போன் திருடிய 2 பேர் கைது


தூத்துக்குடியில் பானிபூரி கடையில் செல்போன் திருடிய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி தென்பழனி காலனியைச் சேர்ந்த சுப்பையன் மகன் மகாலிங்கம் (வயது 40). இவர் தூத்துக்குடி பனிமய மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு பீச் ரோடு பகுதியில் பானிபூரி கடை நடத்தி வந்தார். இந்த நிலையில் கடந்த 3-ந்தேதி அன்று மகாலிங்கம் மற்றும் கடையில் வேலை பார்க்கும் 3 பேர் தங்கள் செல்போன்களை சார்ஜ் போட்டுவிட்டு தூங்கினார்களாம். மறுநாள் காலையில் எழுந்து பார்த்தபோது, அந்த 3 செல்போன்களும் திருடு போனது தெரிய வந்துள்ளது.

இதுகுறித்த புகாரின் பேரில் தென்பாகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமிராக்களை ஆய்வு செய்தனர். அப்போது, தூத்துக்குடி பி.வி.ஆர்.புரத்தை சேர்ந்த விஜய் (30) மற்றும் தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த ஆஷ்வால்ட் மகன் பிரசாத் (26) ஆகிய 2 பேரும் மகாலிங்கம் கடையில் வைத்திருந்த செல்போன்களை திருடியது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து தென்பாகம் போலீசார் விசாரணை நடத்தி விஜய், பிரசாத் ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன்களையும் பறிமுதல் செய்தனர்.


Next Story