லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

வீரவநல்லூரில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

சேரன்மாதேவி:

வீரவநல்லூர் பகுதியில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரேச்சல் மெர்சி மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது உப்புவாணிமுத்தூர் விலக்கு அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். அதில் அவர்கள் வீரவநல்லூரை சேர்ந்த சந்தனகணேஷ் (வயது 27), இசக்கி (32) என்பதும், கேரள மாநில லாட்டரி சீட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்ததும் தெரியவந்தது. இதுகுறித்து வீரவநல்லூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் காவுராஜன் வழக்குப்பதிவு செய்தார். மேலும் சந்தனகணேஷ், இசக்கி ஆகியோரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.


Next Story