லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது


லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது
x

நெல்லை சந்திப்பில் லாட்டரி சீட்டுகள் விற்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை சந்திப்பு போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மீனாட்சிபுரம் வாட்டர் டேங்க் அருகே சந்தேகப்படும்படியாக நின்ற 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர்கள் நெல்லை சந்திப்பு மீனாட்சிபுரத்தை சேர்ந்த வீரபுத்திரன் (வயது 48), நெல்லை டவுன் சுந்தரனார் தெருவை சேர்ந்த காந்திமதிநாதன் (45) ஆகியோர் என்பதும், அவர்கள் வெளிமாநில லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3 வெளிமாநில லாட்டரி சீட்டுகள், ரூ.10 ஆயிரம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story