மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி


மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
x

சிவகிரி அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதியதில் 2 தொழிலாளர்கள் பலியானார்கள்.

தென்காசி

சிவகிரி:

சிவகிரி அருகே மேல கரிசல்குளம் இந்திரா காலனியைச் சேர்ந்த முருகையா மகன் ராமச்சந்திரன் (வயது 28). அதே பகுதியை சேர்ந்தவர் போத்தி மகன் மாரி (40). சிவகிரியில் உள்ள செங்கல் சூளையில் கூலி வேலை பார்த்து வந்தனர். நேற்று முன்தினம் வேலை முடிந்து இருவரும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் சென்றனர். மோட்டார் சைக்கிளை ராமச்சந்திரன் ஓட்டினார். சிவகிரிக்கு தெற்கே வெற்றிலை மண்டபம் அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி, அவர்களின் மோட்டார்சைக்கிள் மீது மோதியது. இதில் இருவரும் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டதில், ராமச்சந்திரன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

தகவல் அறிந்ததும் சிவகிரி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்தனர். காயம் அடைந்த மாரியை மீட்டு சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியில் மாரியும் பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து சிவகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அமிர்தராஜ் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் மனோகரன் விசாரணை நடத்தி லாரி டிரைவர் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் தாலுகா சுந்தரநாச்சியாபுரத்தைச் சேர்ந்த அமல்ராஜ் மகன் செல்வராஜ் (33) என்பவரை கைது செய்தார்.


Related Tags :
Next Story