குட்கா கடத்திய 2 பேர் கைது


குட்கா கடத்திய 2 பேர் கைது
x

கபிலர்மலை அருகே குட்கா கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். 386 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

நாமக்கல்

பரமத்திவேலூர்

குட்கா கடத்தல்

பரமத்தி வேலூர் தாலுகா, கபிலர்மலை அருகே உள்ள இருக்கூர் பகுதியில் நேற்று பரமத்தி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது இருக்கூர் பஸ் நிறுத்தம் அருகே சந்தேகத்திற்குரிய வகையில் இரண்டு பேர் நான்கு மூட்டைகளுடன் நின்று கொண்டிருந்தனர்.

சந்தேகம் அடைந்த சப்-இன்ஸ்பெக்டர் சரண்யா அவர்கள் இருவரையும் பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் அவர்கள் வைத்திருந்த நான்கு சாக்கு மூட்டைகளையும் பிரித்து சோதனை மேற்கொண்டனர். இதில் இரண்டு மூட்டைகளிலும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட 386 கிலோ பான் குட்கா விற்பனைக்காக கடத்தி வந்தது தெரிந்தது.

2 பேர் கைது

இதனை அடுத்து 2 பேரையும் பிடித்து விசாரணை நடத்தியதில் கபிலர்மலை அருகே உள்ள வேட்டுவம்பாளையத்தை சேர்ந்த கருப்பண்ணன் மகன் நல்லசிவம் (வயது 32) மற்றும் கரூர் அண்ணாநகரை சேர்ந்த விஸ்வநாதன் (29) என்பது தெரிய வந்தது. அதனை தொடர்ந்து பரமத்தி போலீசார் அவர்கள் 2 பேர் மீதும் வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவர்களிடமிருந்து 386 கிலோ பான் குட்காவை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story