மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
திருச்சி
திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்த வெங்கடாசலபுரம் கிழக்கு தெருவை சேர்ந்தவர் வேலாயுதம் (வயது 62). விவசாயியான இவர் மாடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இவர் மாடுகளை தோட்டத்துக்கு மேய்ச்சலுக்கு அழைத்து சென்றார். பின்னர் மாலையில் மீண்டும் வீட்டுக்கு அழைத்து வந்து, தகர கொட்டகையில் கட்டி வைத்து இருந்தார். அப்போது இரவில் இடியுடன் மழை பெய்தது.
இதனிடையே திடீரென்று 2 மாடுகளை மின்னல் தாக்கியது. இதில் மாடுகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. இதுகுறித்த தகவலின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் காசி, கால்நடை மருத்துவர் சரோஜா மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினர். பின்னர் 2 மாடுகளும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு புதைக்கப்பட்டன. இந்த சம்பவம் அப்பகுதி விவசாயிகளிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story