கல்வராயன்மலையில் மழை மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன


கல்வராயன்மலையில் மழை  மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன
x

கல்வராயன்மலையில் மழை பெய்தது. இந்நிலையில் மின்னல் தாக்கி 2 மாடுகள் செத்தன.

கள்ளக்குறிச்சி


கச்சிராயப்பாளையம்,

கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை பகுதியில் நேற்று அதிகாலை இடி மின்னலுடன் மழை பெய்தது. தொரடிப்பட்டு அருகே மட்டப்பட்டு கிராமத்தில் வசிக்கும், பழனிச்சாமி என்பவரது 2 மாடுகள் மின்னல் தாக்கியதில் பரிதாபமாக இறந்து போனது.

இதுபற்றி அறிந்த தொரடிப்பட்டு கால்நடை மருந்தகத்தின் கால்நடை மருத்துவர் செல்வம், கால்நடை பராமரிப்பு உதவியாளர் ஜெயக்குமார் உதவியுடன் இறந்த மாடுகளை பிரேத பரிசோதனை செய்தார்.


Next Story