ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது


ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
x

நெல்லையில் ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சென்னை

நெல்லை குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் மகேஸ்வரன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று பல்வேறு இடங்களில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பாளையங்கோட்டை கக்கன்நகர் பகுதியில் காரில் 640 கிலோ ரேஷன் அரிசி கடத்தியதாக கக்கன்நகரை சேர்ந்த சுரேஷ் (வயது 31) என்பவரை கைது செய்தனர். அவரிடம் இருந்து ரேஷன் அரிசியுடன் கார் பறிமுதல் செய்யப்பட்டது. இதேபோல் கடையம் பெரியதெருவை சேர்ந்த ரங்கன் (30) என்பவர் பதுக்கி வைத்திருந்த 1,050 கிலோ ரேஷன் அரிசியை பறிமுதல் செய்து அவரை போலீசார் கைது செய்தனர்.


Next Story