ரேஷன் அரிசி கடத்திய 2 பேர் கைது
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
குழித்துறை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிாிவு போலீசார் கடந்த 30-ந் தேதி மேக்கோடு சோதனைச்சாவடியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு டெம்போவை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது அதில் 6 டன் ரேஷன் அரிசி இருந்தது தெரியவந்தது. அந்த அாிசியை கேரளாவுக்கு கடத்தி சென்றதும் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து ரேஷன் அரிசியை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டெம்போ டிரைவரான விளவங்கோடு காளைசந்தை ஆர்.சி. தெருவை சேர்ந்த சைமோன் என்பவரை கைது செய்தனர். இந்த வழக்கில் அருள்ஜோசப் ஸ்டாலின் என்பவர் தலைமறைவாக இருந்தார். அவரை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று அவரை கைது செய்தனர். கைதான அருள்ஜோசப் ஸ்டாலின் மீது நெல்லை மாவட்டத்திலும் அரிசி கடத்தல் வழக்கு ஒன்று உள்ளது குறிப்பிடத்தக்கது.