கஞ்சா கடத்திய 2 பேர் கைது


கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

திண்டுக்கல் அருகே, மோட்டார் சைக்கிளில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

திண்டுக்கல்லை அடுத்த சிறுமலைப்பிரிவு அருகே நத்தம் சாலையில், தனிப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகுபாண்டி தலைமையிலான போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேரை மடக்கி பிடித்து போலீசார் விசாரித்தனர்.

விசாரணையில் அவர்கள் சிறுமலை தென்மலை பகுதியை சேர்ந்த பிரகாஷ் (வயது 34), நிலக்கோட்டை அணைப்பட்டியை சேர்ந்த கணேஷ் பாண்டி (24) என்று தெரியவந்தது. மேலும் அவர்கள் வைத்திருந்த பையை போலீசார் சோதனை செய்தனர். அதில், கஞ்சா பொட்டலங்கள் இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களிடம் இருந்து 4 கிலோ கஞ்சா, மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக திண்டுக்கல் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரகாஷ், கணேஷ் பாண்டி ஆகியோரை கைது செய்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story