கஞ்சா கடத்திய 2 பேர் கைது


கஞ்சா கடத்திய 2 பேர் கைது
x

கொடைரோடு அருகே கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

திண்டுக்கல்

அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜய பாண்டியன் மற்றும் போலீசார் கொடைரோடு அருகே கொழிஞ்சிபட்டி பிரிவு என்னுமிடத்தில் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். அப்போது திண்டுக்கல்லில் இருந்து மதுரை நோக்கி வந்த ஒரு ஆட்டோவை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த ஆட்டோவில் 1 கிலோ 100 கிராம் கஞ்சா கடத்தி செல்வது கண்டுபிடிக்கப்பட்டது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். பின்னர் அந்த ஆட்டோவில் வந்த 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள், ஒட்டன்சத்திரத்தை அடுத்த கொல்லம்பட்டியை சேர்ந்த ரமேஷ்குமார் (வயது 40), பழைய கன்னிவாடியை அடுத்த செவனகரையான்பட்டியை சேர்ந்த ராஜா (42) என்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். மேலும் ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story