நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது


நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய   2 பேர் கைது
x

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்:

நாகா்கோவிலில் கஞ்சா கடத்திய 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

நாகர்கோவில் ஆசாரிபள்ளம் போலீசார், மேல பெருவிளை பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டாா் சைக்கிளில் வந்தவர்களை தடுத்து நிறுத்தி சோதனை செய்த போது, அவர்களிடம் 700 கிராம் கஞ்சா இருப்பது தெரியவந்தது. அவர்கள் அதே பகுதியை சேர்ந்த கிறிஸ்து ஜெனின் (வயது 31), கார்த்திக் என்றும், கஞ்சாவை அப்பகுதியில் விற்பனை செய்ய கடத்தியதும் தெரிய வந்தது.

அதைத்தொடர்ந்து கிறிஸ்து ஜெனின், கார்த்திக் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் மோட்டார் சைக்கிளுடன் கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டது.


Next Story