சாராயம் கடத்தியவர்கள் கைது
சாராயம் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்.
நாகை தனிப்படை போலீசார் செல்லூர் கிழக்கு கடற்கரை சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை மறித்து சோதனை செய்தனர். இதில் புதுச்சேரி மாநிலத்தில் இருந்து காரில் சாராயம் கடத்தி வரப்பட்டது இதையடுத்து காரில் இருந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் நாகை ராமநாயக்கன்குளம் வடகரை பகுதியை சேர்ந்த பால்பாண்டி (வயது 43), அருள்மொழித்தேவன் மெயின் ரோடு பகுதியை சேர்ந்த உதயகுமார் (25) ஆகியோர் என்பதும் புதுச்சேரி மாநிலம் காரைக்காலில் இருந்து நாகைக்கு காரில் சாராய பாட்டில்களை கடத்தி வந்தும் தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் கைது செய்த போலீசார், ரூ. 25 ஆயிரம் மதிப்புள்ள சாராய பாட்டில்களுடன் காரை பறிமுதல் செய்து நாகை வெளிப்பாளையம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் மற்றும் சாராய பாட்டில்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹர்ஷ் சிங் பார்வையிட்டார்.