மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது


மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது
x

மதுபாட்டில்கள் வைத்திருந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

தஞ்சாவூர்

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கச்சமங்கலம் கிராமத்தில் மது விற்பனை நடைபெறுவதாக தோகூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் வந்தது. தகவலின் பேரில் தோகூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அய்யா பிள்ளை அங்கு தீவிர சோதனை மேற்கொண்டார். அப்போது கச்சமங்கலம் பிள்ளையார் கோவில் அருகில் 11 மது பாட்டில்களை விற்பனைக்காக வைத்திருந்த கச்சமங்கலம் காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த பிரபாகரன் (வயது23) என்பவரை கைது செய்தனர். அதேபோல் பூதலூர் அருகே உள்ள தொண்டாம்பட்டி பூசாரி தெருவில் 7 மது பாட்டில்களை விற்பனை செய்ய வைத்திருந்த அதே தெருவைச் சேர்ந்த ராஜசேகர் (38) என்பவரை பூதலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜகஜீவன் கைது செய்தார்.


Next Story