மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது
மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே ஆனைமங்கலம் அருகே ஓர்குடி வெட்டாறு பாலம் பகுதியில் போலீஸ் இன்ஸ்பெக்டர் தியாகராஜன் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் கீழ்வேளூரை சேர்ந்த பாலு மகன் கார்த்திகேயன் (வயது32), என்பதும் மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதேபோல் கீழ்வேளூர் தேரடி பாலம் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டபோது சங்கமங்கலம் பழையனூர் மேல் பாதியை சேர்ந்த வேலுச்சாமி மகன் முருகா (23) என்பவர் காரைக்காலில் இருந்து மோட்டார் சைக்கிளில் சாராயம் கடத்தி வந்தது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கார்த்திகேயன், முருகா ஆகிய 2 பேரையும் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 220 லிட்டர் சாராயம், கடத்தலுக்கு பயன்படுத்திய 2 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.