ரூ.16 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்


ரூ.16 கோடியில் வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 3 April 2023 12:30 AM IST (Updated: 3 April 2023 12:31 AM IST)
t-max-icont-min-icon

சாணார்பட்டி ஒன்றியத்தில் ரூ.16 கோடியில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கு வேலுச்சாமி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

திண்டுக்கல்

சாணார்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதி, ஒன்றிய பொதுநிதி, அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம், 15-வது நிதிக்குழு மானியம், நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.16 கோடி செலவில் வளர்ச்சி திட்ட பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. பொருளாளரும், மாவட்ட கவுன்சிலருமான க.விஜயன் தலைமை தாங்கினார். சாணார்பட்டி ஒன்றிய தி.மு.க. செயலாளர்கள் தர்மராஜன், மோகன், சாணார்பட்டி ஒன்றிய குழு தலைவர் பழனியம்மாள், ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக வேலுச்சாமி எம்.பி. கலந்து கொண்டு பல்வேறு பணிகளை தொடங்கி வைத்தார். பின்னர் அவர், சக்கிலியன்கொடை அரசு உயர்நிலைப்பள்ளிக்கு மாவட்ட கவுன்சிலர் நிதியிலிருந்து 40 மேஜை, நாற்காலிகளை வழங்கினார். பொம்மயகவுண்டன்பட்டியில் நாடகமேடையை திறந்து வைத்தார். இதனை தொடர்ந்து கோபால்பட்டியில், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டத்தின் கீழ் சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சியில் 200 கர்ப்பிணிகளுக்கு எம்.பி. சார்பில் தலா ரூ.500 மற்றும் மாவட்ட கவுன்சிலர் விஜயன் சார்பில் தலா ஒரு புடவை வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியில் திண்டுக்கல் மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் சுந்தரராஜன், மாவட்ட கவுன்சிலர் லலிதா, சாணார்பட்டி ஒன்றியக்குழு துணை தலைவர் ராமதாஸ், ஒன்றிய கவுன்சிலர்கள் முருகேசன், ஆண்டிச்சாமி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர்கள் நிஷா, கந்தசாமி, தேவி சீனிவாசன், நடராஜன், சலேத்மேரி, விஜயா, தமிழரசி, சாணார்பட்டி ஒன்றிய பொறியாளர் பிரிட்டோ உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


Next Story