விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய்
விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை மூலம் ரூ.15 லட்சத்து 48 ஆயிரம் வருவாய் கிடைத்தது.
புதுக்கோட்டை
விராலிமலை முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் அனிதா தலைமையிலும், செயல் அலுவலர் ராமமூர்த்தி, ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலையில் உண்டியல்கள் திறந்து எண்ணப்பட்டன. இதில் ரொக்கம் 15 லட்சத்து 48 ஆயிரத்து 247-ம், 52 கிராம் தங்கமும், 1 கிலோ 628 கிராம் வெள்ளியும் கிடைத்தது. மேலும் மலேசியா 50 ரியால்- 2, 10 ரியால்- 1, 1 ரியால்- 6, சிங்கப்பூர் 10 டாலர் 3 மற்றும் ஆஸ்திரேலியா 50 டாலர் 2-ம் வசூலானது. உண்டியல் காணிக்கை எண்ணும் பணியில் மேற்பார்வையாளர் மாரிமுத்து, அரசு பள்ளி மாணவர்கள், திருக்கோவில் பணியாளர்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story