கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது


கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பு பிடிபட்டது
x

ஒடுகத்தூர் அருகே கோவில் வளாகத்தில் 15 அடிநீள மலைப்பாம்பை இளைஞர்கள் பிடித்தனர்.

வேலூர்

அணைக்கட்டு தாலுகா ஒடுகத்தூரை அடுத்த எல்லப்பன்பட்டி கிராமம் மலை மற்றும் காடுகளை ஒட்டி அமைந்துள்ளது. இந்த கிராமத்துக்குள் மான், மயில், குரங்குகள், பாம்பு வகைகள் போன்றவை நடமாட்டம் உள்ளது. குறிப்பாக வாரத்திற்கு 3 அல்லது 4 முறையாவது மலை பாம்புகள், கொடிய விஷத்தன்மை வாய்ந்த பாம்புகள் வந்து விடுகின்றன.

இதனை அந்த ஊர் இளைஞர்களே பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்து விடுகின்றனர். இந்நிலையில், எல்லப்பன்பட்டி கிராமத்தில் உள்ள காளியம்மன் கோவில் அருகே 15 அடி நீளம் கொண்ட மலைப்பாம்பு ஒன்று ஊர்ந்து சென்றது.

இதனை பார்த்த அப்பகுதி இளைஞர்கள் சிலர் மலைப் பாம்பை லாவகமாக பிடித்தனர். பின்னர் அது குறித்து வனத்துறையினருக்கு தெரிவித்தனர். உடனடியாக வனச்சரகர் அலுவலர் இந்து தலைமையிலான வனத்துறையினர் அங்கு வந்தனர். அவர்களிடம் மலைப்பாம்பை இளைஞர்கள் ஒப்படைத்தனர்.


Next Story