1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்
காரமடையில் 1,100 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக வியாபாரி கைது செய்யப்பட்டார்.
காரமடை
கோவையை அடுத்த காரமடையில் புகையிலை பொருட்கள் விற்ப னை செய்யப்படுவதாக ரகசிய தகவல் வந்தது. அதன்பேரில் கார மடை போலீசார் காரமடை-மேட்டுப்பாளையம் சாலை குட்டையூர் பஸ் நிறுத்தம் அருகே வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த காரை நிறுத்தி சோதனை நடத்தினர். இதில் அந்த காருக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து காரில் வந்தவரிடம் விசாரித்த போது, அவர் மேட்டுப்பாளையம் கரட்டுமேட்டை சேர்ந்த வியாபாரி காஜா மைதீன் (வயது49) என்பதும் அவர், கர்நாடக மாநிலத்தில் இருந்து புகையிலை பொருட்களை காரில்கடத்தி வந்து காரமடை டீச்சர்ஸ் காலனியில் ஒரு வீட்டில் புகையிலையை பதுக்கி வைத்திருந்ததும் தெரியவந்தது. அந்த வீட்டில் இருந்த 1100 கிலோ புகையிலை பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.6½ லட்சம் இருக்கும் என்று போலீசார் தெரிவித்தனர். உடனே காஜா மைதீனை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஒரு கார், 2 இருசக்கர வாகனங்கள பறிமுதல் செய்யப்பட்டன. காஜா மைதீனை போலீசார் மேட்டுப்பாளையம் கோர்ட்டில் ஆஜர்படுத்தி, கோவை சிறையில் அடைத்தனர். காஜா மைதீனுக்கு உடந்தையாக இருந்து அவருடைய மனைவியை போலீசார் தேடி வருகின்றனர்.
புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த காரமடை போலீசாருக்கு மேட்டுப்பாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி ரொக்க பரிசு வழங்கி பாராட்டினார்.