தடை செய்யப்பட்ட 110 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்

தடை செய்யப்பட்ட 110 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல்
x

செய்யாறில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திருவண்ணாமலை

செய்யாறு

செய்யாறில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் 110 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

தமிழக அரசின் உத்தரவின்படி தடை செய்யப்பட்டுள்ள பிளாஸ்டிக் பயன்பாட்டினை தவிர்த்திட செய்யாறு டவுன் வணிக வளாகங்களில் திருவத்திபுரம் நகராட்சி ஆணையாளர் ரகுராமன் தலைமையில் துப்புரவு அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் மதனராசன் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது வணிகர்கள் பயன்படுத்திய தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் சுமார் 110 கிலோ பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பாக. சம்பந்தப்பட்ட வியாபாரிகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டது.

Next Story