ரூ.11 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்-ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தகவல்


ரூ.11 கோடியில் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்-ராமநாதபுரம் நகராட்சி கூட்டத்தில் தகவல்
x
தினத்தந்தி 5 Jan 2023 12:15 AM IST (Updated: 5 Jan 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகர்பகுதி தேவைக்காக பொட்டிதட்டி குடிநீர் திட்டம் ரூ.11 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக நகரசபை கூட்டத்தில் அதன் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

ராமநாதபுரம்

ராமநாதபுரம்

ராமநாதபுரம் நகர்பகுதி தேவைக்காக பொட்டிதட்டி குடிநீர் திட்டம் ரூ.11 கோடியில் செயல்படுத்தப்பட உள்ளதாக நகரசபை கூட்டத்தில் அதன் தலைவர் கார்மேகம் தெரிவித்தார்.

நகரசபை கூட்டம்

ராமநாதபுரம் நகரசபை கூட்டம் தலைவர் கார்மேகம் தலைமையில் நடைபெற்றது. துணைத்தலைவர் பிரவீன் தங்கம், ஆணையாளர் சுரேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். கூட்டத்தில் கவுன்சிலர்கள் இடையே நடந்த விவாதங்கள் வருமாறு:-

கவுன்சிலர் குமார்: பழைய நகர்மன்ற கட்டிடம் இடிக்கப்பட உள்ளது. அந்த இடத்தில் புதிய நகர்மன்ற கட்டிடம் கட்ட வேண்டும். நகராட்சி சொத்துவரி விதிப்புகளை சீரமைக்க வேண்டும். வைகை தண்ணீர் கடலில் கலந்து வீணாகிறது. ஊருணிகளில் அவற்றை தேக்கி வைக்க வேண்டும். வண்டிக்காரத்தெரு பகுதியில் குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது.

நகராட்சி ஆணையாளர்: வைகை தண்ணீரை 23 ஊருணிகளில் தேக்கி வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சொத்துவரி விதிப்பு குறித்து ஆய்வு செய்யப்படும்.

நகர்மன்ற தலைவர்: இளங்கோவடிகள் தெரு பகுதியில் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். நகரில் பெருகி வரும் நாய்களை பிடித்து கருத்தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

மழைநீர்

கவுன்சிலர் இந்திராமேரி: 26-வது வார்டில் பாதாள சாக்கடை நீரேற்று நிலையத்தில் இருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதாரக்கேடு ஏற்பட்டுள்ளது.

கவுன்சிலர் மணிகண்டன்: கிடாவெட்டி ஊருணி, வண்ணார்ஊருணி, முகவை ஊருணி, மானாங்குண்டு ஊருணி ஆகியவற்றில் பாதாள சாக்கடை கழிவுநீர் கலந்து வருகிறது.

கவுன்சிலர் தனபாண்டியம்மாள்: 4-வது வார்டு பகுதியில் கட்டிமுடிக்கப்பட்ட அங்கன்வாடி மையத்தினை உடனடியாக திறக்க வேண்டும். பொதுக்கழிப்பறையை சீரமைக்க வேண்டும்.

கவுன்சிலர் ஜெயராமன்: ஊருணிகளில் மழைநீரை தேக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கவுன்சிலர் கோபால்: சின்னச்சாமி புதுத்தெரு, கோட்டை மேடு தெருவில் கழிவுநீரை அகற்ற வேண்டும்.

குடிநீர் திட்டம்

நகர்மன்ற தலைவர்: அதிகாலை 4.30 மணி முதல் நகர்பகுதி முழுவதும் ஆய்வு செய்து வருகிறேன். 5 மணி முதல் தூய்மை பணியாளர்கள் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஊருணிகளில் கோழி, இறைச்சி கழிவுகள் குப்பைகள் போடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சி வரிவசூலில் 18-வது இடத்தில் இருந்த ராமநாதபுரம் தற்போது 8-வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ஏற்கனவே காவிரி குடிநீர் திட்டம் செயல்பாட்டில் உள்ளது. காவிரியில் புதிய குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. ராமநாதபுரத்திற்கு ஏற்கனவே கிடைத்து வந்த பொட்டிதட்டி குடிநீர் திட்டத்தினை ரூ.11 கோடியில் சீரமைக்க திட்டமிடப்பட்டது. இதற்காக மதுரை ரோட்டில் பொட்டிதட்டி முதல் ராமநாதபுரம் வரை குழாய் பதிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கவுன்சிலர் ரமேஷ்: ஒப்பந்த பணிகளுக்கு அந்தந்த வார்டு கவுன்சிலரிடம் சான்று பெற அறிவுறுத்த வேண்டும். குடிநீர் பணிக்காக சாலை நடுவில் தோண்டப்பட்ட பள்ளம் மூடப்படாமல் உள்ளது.

ஆணையாளர்: ஒப்பந்த பணிக்கு கவுன்சிலரிடம் சான்று பெறும் நடைமுறை விதிகளில் இல்லை. இவ்வாறு விவாதங்கள் நடைபெற்றது.


Next Story