108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர்


108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர்
x

மாவட்டத்தில் கடந்த ஆண்டு 108 ஆம்புலன்ஸ் சேவையால் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர் என்று மண்டல அதிகாரி தகவல் தெரிவித்தனர்.

நாமக்கல்

108 ஆம்புலன்ஸ் சேவையின் சேலம் மண்டல மேலாளர் குமரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாமக்கல் மாவட்டத்தில் 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் 27 இயக்கப்பட்டு வருகின்றன. இதில் 100-க்கும் மேற்பட்ட டிரைவர்கள் மற்றும் மருத்துவ உதவியாளர்கள் என சுழற்சி முறையில் பணியமர்த்தப்பட்டு 24 மணி நேரமும் இயக்கப்பட்டு இருக்கின்றன. நாமக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை நோயாளி இருக்கும் இடத்திற்கு சராசரியாக 13 நிமிடங்களில் 108 ஆம்புலன்ஸ் வாகனம் வந்து சேருகிறது.

இம்மாவட்டத்தில் கடந்த ஜனவரி மாதத்தில் 3,635 பேரும், பிப்ரவரி மாதத்தில் 2,618 பேரும், மார்ச் மாதத்தில் 2,960 பேரும், ஏப்ரல் மாதத்தில் 2,855 பேரும், மே மாதத்தில் 2,921 பேரும், ஜூன் மாதத்தில் 2,876 பேரும், ஜூலை மாதத்தில் 2,860 பேரும், ஆகஸ்டு மாதத்தில் 2,846 பேரும், செப்டம்பர் மாதத்தில் 3,233 பேரும், அக்டோபர் மாதத்தில் 3,222 பேரும், நவம்பர் மாதத்தில் 3,074 பேரும், டிசம்பர் மாதத்தில் 3,105 பேரும் என மொத்தம் 36,205 பேர் பயன் அடைந்து உள்ளனர். இதில் சாலை விபத்தில் 8,289 பேரும், கர்ப்பிணி பெண்கள் 6,988 பேரும் பயன் அடைந்து உள்ளனர். 36 கர்ப்பிணிகளுக்கு 108 ஆம்புலன்ஸ் உள்ளேயே பிரசவம் பார்த்து அசத்தி உள்ளனர்.

இவ்வாறு அதில் கூறி உள்ளார்.


Next Story