உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூஜை
திருவெற்றியூரில் உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூைஜ நடந்தது. இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கிவைத்தார்.
தொண்டி
திருவெற்றியூரில் உலக நன்மைக்காக 1,008 திருவிளக்கு பூைஜ நடந்தது. இதில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தொடங்கிவைத்தார்.
1,008 திருவிளக்கு பூஜை
திருவாடானை தாலுகா திருவெற்றியூர் பாகம்பிரியாள் சமேத வல்மீகநாத சுவாமி கோவிலில் தமிழ்நாடு இந்து மக்கள் நல இயக்கம் சார்பில் உலக நன்மைக்காகவும் விவசாயம் செழிக்கவும் நல்ல மழை பெய்ய வேண்டியும் 1,008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பா.ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் தலைமை தாங்கினார். பா.ஜனதா திருவாடானை கிழக்கு ஒன்றிய தலைவர் துரை ஜெயபாண்டி முன்னிலை வகித்தார். அனைவரையும் இந்து மக்கள் நல இயக்க மாநில தலைவர் இளையராஜா வரவேற்றார்.
நிகழ்ச்சியில் பா.ஜனதா மாவட்ட தலைவர் தரணி முருகேசன் குத்துவிளக்கு ஏற்றி வைத்து திருவிளக்கு பூஜையை தொடங்கி வைத்தார். திருவாடானை சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் குத்துவிளக்கு ஏற்றி விநாயகர் பூஜை, மாங்கல்ய பூஜை செய்து வழிபாடு செய்தனர். விவேகானந்தா கேந்திரா சகோதரிகள் திருவிளக்கு பூஜையை நடத்தி வைத்தனர்.
கலந்து கொண்டவர்கள்
திருவிளக்கு பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு பூஜை பொருட்கள் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஆர்.எஸ். மங்கலம் பா.ஜனதா ஒன்றிய தலைவர் நரசிங்கம், மாவட்ட பா.ஜனதா துணைத்தலைவர் அழகர்சாமி, மாவட்ட பொதுச்செயலாளர் மணிமாறன், மாவட்டச்செயலாளர் ரமேஷ் பாபு, வக்கீல் சவுந்தரபாண்டியன், ஒன்றிய பொதுச்செயலாளர்கள் தங்கராசு, ரமணன், மாவட்ட விவசாய பிரிவு செயலாளர் ரமேஷ், மாவட்ட மகளிர் அணி செயலாளர் சுந்தரி, ரமேஷ் பாபு, முத்து பாலு, ராஜ்குமார், சக்திவேலு, இந்து மக்கள் நல இயக்க மாநில துணைத் தலைவர் பாலசுப்பிரமணியன், மற்றும் திருவாடானை பா.ஜனதா ஒன்றிய நிர்வாகிகள், சக்தி கேந்திர பொறுப்பாளர்கள், பா.ஜனதா பல்வேறு பிரிவுகளின் நிர்வாகிகள், இந்து மக்கள் நல இயக்க நிர்வாகிகள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். இதனையொட்டி அன்னதானம் நடைபெற்றது. இதற்கான ஏற்பாடுகளை இந்து மக்கள் நல இயக்க நிறுவனர் மாநிலத் தலைவர் இளையராஜா தலைமையில் நிர்வாகிகள் மற்றும் பா.ஜனதா நிர்வாகிகள் செய்திருந்தனர். திருவாடானை போலீஸ் துணை சூப்பிரண்டு நிரேஷ், போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயபாண்டி தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.