வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம்
வேதாரண்யேஸ்வரர் கோவிலில் 1,008 சங்காபிஷேகம் நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கார்த்திகை கடைசி சோமவாரத்தையொட்டி 1,008 சங்காபிஷேகம் நடந்தது. இதை முன்னிட்டு கலசங்கள் வைத்து யாகம் வளர்த்து 1008 சங்குகளுடன் பூஜை நடைபெற்றது. பின்பு புனித நீர் அடங்கிய கலசங்கள், சங்குகள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு சாமிக்கு அபிஷேக ஆராதனை செய்யப்பட்டு மலர்களால் அலங்கரித்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் யாழ்பாணம் வரணீ ஆதீனம் செவ்வந்திநாத பண்டார சந்நிதி, கோவில் செயல் அலுவலர் அறிவழகன் உள்பட அலுவலா்கள் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story