மார்த்தாண்டம் பகுதியில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

மார்த்தாண்டம் பகுதியில் 1 டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்
x

மார்த்தாண்டம் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 16 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

கன்னியாகுமரி

குழித்துறை:

மார்த்தாண்டம் பகுதியில் நகராட்சி அதிகாரிகள் நடத்திய சோதனையில் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதுதொடர்பாக 16 கடைகளுக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

அதிரடி சோதனை

குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட மார்த்தாண்டம் மற்றும் குழித்துறை பகுதிகளில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக நகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதை தொடர்ந்து குழித்துறை நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி தலைமையில் துப்புரவு பணி, தூய்மை இந்தியா திட்ட பணி மேற்பார்வையாளர்கள் மற்றும் பரப்புரையாளர்கள் மார்த்தாண்டம் பகுதியில் உள்ள மார்க்கெட் ரோடு மற்றும் மெயின் ரோடு பகுதிகளில் உள்ள கடைகளில் குழுவாக சென்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

ரூ.50 ஆயிரம் அபராதம்

அப்போது அவர்கள் 16 கடைகளில் இருந்து அரசால் தடை செய்யப்பட்ட ஒரு டன் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்தனர். மேலும் அந்த கடைகளுக்கு மொத்தம் ரூ.50 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

இதுகுறித்து நகராட்சி சுகாதார ஆய்வாளர் குருசாமி கூறும்போது, 'குழித்துறை நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கடைகளில் அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது. அவ்வாறு பயன்படுத்தவதை தடுக்க தொடர் சோதனைகளும் தடுப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும்' என்றார்.

Next Story