வெண்ணந்தூர் அருகே1½ கிலோ கஞ்சா பறிமுதல்


வெண்ணந்தூர் அருகே1½ கிலோ கஞ்சா பறிமுதல்
x
நாமக்கல்

நாமக்கல் மாவட்டம் வெண்ணந்தூர் அருகே உள்ள தொட்டிவலசு மேம்பாலத்திற்கு அடியில் கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஸ்கண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜூ மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் அம்பிகா தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் முருகன், சுப்பிரமணி ஆகியோர் அடங்கிய குழுவினர் நேற்று அப்பகுதியில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் நின்று கொண்டு இருந்த 2 பேரை பிடித்து விசாரணை செய்தனர். விசாரணையில் அவர்கள் சேலத்தை சேர்ந்த பூபதி (வயது 23), ஸ்ரீதர் (25) என்பது தெரியவந்தது. மேலும் கஞ்சா விற்பனையில் ஈடுபடுவதும் கண்டறியப்பட்டது. இதையடுத்து 2 பேரையும் கைது செய்த நாமக்கல் மதுவிலக்கு போலீசார் அவர்களிடம் இருந்து 1½ கிலோ கஞ்சா மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.


Next Story