சாலையில் உலா வந்த கரடிகள்


சாலையில் உலா வந்த கரடிகள்
x
தினத்தந்தி 2 Dec 2022 12:15 AM IST (Updated: 2 Dec 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

கோத்தகிரி பகுதியில் மேரக்காய் சாகுபடி செய்யும் பணி தொடங்கியுள்ளது.

நீலகிரி

கோத்தகிரி

கோத்தகிரி பகுதியில் மேரக்காய் சாகுபடி செய்யும் பணி தொடங்கியுள்ளது.

மேரக்காய் சாகுபடி

நீலகிரி மாவட்டம் கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் ஏராளமான விவசாயிகள் மலை காய்கறிகளை சாகுபடி செய்து வருகின்றனர். இதில் குறிப்பாக விவசாயிகள் மிளிதேன், எரிசிபெட்டா, நெடுகுளா, இந்திரா நகர், வ.உ.சி.நகர், ஓடேன் துறை உள்ளிட்ட பகுதிகளில் 100 ஏக்கர் பரப்பளவில் மேரக்காய் பயிரிட்டனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக கோத்தகிரி சுற்று வட்டார பகுதியில் பலத்த மழை மற்றும் பனிப்பொழிவு காரணமாக மேரக்காய் கொடிகள் சேதமடைந்தன. மேலும் அறுவடைக்கு தயாராக இருந்த காய்கள் அழுகின. மேரக்காய்க்கு நல்ல கொள்முதல் விலை கிடைத்து வந்த நிலையில், கொடிகள் சேதமடைந்ததால், விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டது.

பந்தல்கள் பராமரிப்பு

இதனால் விவசாயிகள் மேரக்காய் தோட்டங்களில் இருந்த சேதமடைந்த கொடிகளை வேருடன் அகற்றி, அங்கு கேரட் பயிரிட்டனர். இந்த நிலையில் கோத்தகிரி பகுதியில் மழை மற்றும் பனிப்பொழிவு குறைந்ததால் விவசாயிகள் மேரக்காய் சாகுபடியில் இறங்கியுள்ளனர்.

இதன்படி, விவசாயிகள் சேதமடைந்த பந்தல்களை பராமரிப்பு செய்து, இயற்கை உரத்துடன் மண்ணை கலந்து விவசாய நிலத்தை தயார் செய்து மேரக்காய் சாகுபடி பணிகளை தொடங்கியுள்ளனர்.

கணிசமான லாபம்

மேலும் விதை காய்களை காட்டுப்பன்றிகள் சேதப்படுத்தாமல் இருக்க நடப்பட்ட நாற்றைச் சுற்றி சாக்கு பைகளை வைத்து மறைத்து கட்டியுள்ளனர்.இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மேரக்காய் கொள்முதல் விலை நிலையாக இருப்பதால், தற்போது அதை மேரக்காய் சாகுபடியில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர். வரும் மாதங்களில் மேரக்காய்களுக்கு கூடுதல் கொள்முதல் விலை கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம். இதனால் விவசாயிகளுக்கு கணிசமான லாபம் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தெரிவித்தனர்.


Next Story