புதுப்பேட்டை அருகே பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்


புதுப்பேட்டை அருகே  பட்டா வழங்க கோரி பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 16 Nov 2022 12:15 AM IST (Updated: 16 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

Near Puduppet Public protest demanding issuance of Patta

கடலூர்

புதுப்பேட்டை

பண்ருட்டி அடுத்த அங்குசெட்டிப்பாளையம் புதுநகர் ஆதிதிராவிடர் பகுதியில் 120 குடும்பத்தினர் சுமார் 35 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இவர்களுக்காக தனிநபருக்கு சொந்தமான அந்த இடத்தை அரசு கையகப்படுத்தி அப்பகுதியில் குடியிருந்து வரும் ஆதி திராவிடர் மக்களுக்கு வழங்குவதற்காக முயற்சி எடுத்து வருவதாக தெரிகிறது. இந்த நிலையில் நீதிமன்ற வழக்கு நிலுவையில் உள்ளதால் பொதுமக்களுக்கு மனை பட்டா வழங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

இதன் காரணமாக அப்பகுதியில் உள்ள மக்களுக்கு அடிப்படை வசதிகள் எதுவும் கிடைக்காததால் அவதியடைந்து வருகின்றனர். இந்த நிலையில் தங்களுக்கு இலவச வீட்டு மனை பட்டா உடனடியாக வழங்க கோரியும், வருவாய்த்துறையினரை கண்டித்தும் அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் அங்குசெட்டிப்பாளையம் ஊராட்சி அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றி அறிந்த பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா, புதுப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகுமார், தாசில்தார் வெற்றிவேல், ஆதிதிராவிடர் நலத்துறை தாசில்தாா் ஸ்ரீதரன் மற்றும் வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது விரைவில் பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையேற்ற பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story