திவாலான வங்கியால் எகிற போகும் தங்கத்தின் விலை... பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏற்படுமா..?
அமெரிக்காவில் வட்டி விகிதம் ஒரே ஆண்டில் 4.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால், வங்கித் துறை பாதிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் வட்டி விகிதம் ஒரே ஆண்டில் 4.75 சதவீதமாக அதிகரிக்கப்பட்டதால், வங்கித் துறை கடுமையாக பாதிக்கப்பட்டு, சிலிக்கான்வேலி வங்கி திவாலானது. பல்வேறு இதர வங்கிகள் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளன.
திவாலான சிலிக்கான் வங்கியின் டெப்பாசிட்கள் மற்றும் கடன்கள் பிரிவை, பர்ஸ்ட் சிட்டிசன்ஸ் வங்கி, அதன் மதிப்பை விட ஆயிரத்து 650 கோடி டாலர் குறைந்த விலைக்கு வாங்கியுள்ளது.
ஒன்பதாயிரம் கோடி டாலர் மதிப்புடைய இதர பிரிவிகளை விற்பனை செய்ய அமெரிக்க வங்கிகள் ஒழுங்குமுறை ஆணையும், முயற்சி செய்து வருகிறது. வங்கி துறைக்கு ஏற்பட்ட பாதிப்புகளின் விளைவாக, சர்வதேச முதலீடுகள் பங்கு சந்தை மற்றும் கச்சா எண்ணெய் சந்தையில் இருந்து வெளியேறி, தங்கத்திற்கு மாறி வருகின்றன.
இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை கடந்த 3 வாரங்களில் பேரலுக்கு 10 டாலர் சரிந்து, 75 டாலராக வீழ்ச்சியடைந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை 2021 நவம்பரின் இருந்த விலைக்கு சரிந்துள்ள நிலையில், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலைகளில் மாற்றம் எதுவும் செய்யப்படாதது குறிப்பிடத்தக்கது.