'உங்கள் தந்தையின் பெயரை கூறி வாக்கு கேளுங்கள்'-அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது உத்தவ் தாக்கரே சாடல்


உங்கள் தந்தையின் பெயரை கூறி வாக்கு கேளுங்கள்-அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள் மீது உத்தவ் தாக்கரே சாடல்
x

‘உங்கள் தந்தையின் பெயரை கூறி வாக்கு கேளுங்கள்” என அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை உத்தவ் தாக்கரே கடுமையாக சாடினார்.

மாவட்ட செய்திகள்

மும்பை,

மந்திரி ஏக்நாத் ஷிண்டே ஆதரவு எம்.எல்.ஏ.க்களுடன் கட்சிக்கு எதிராக திரும்பி உள்ள நிலையில், நேற்று சிவசேனா தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் சேனா பவனில் தேசிய செயற்குழு கூட்டம் நடந்தது. கூட்டத்தில் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக உத்தவ் தாக்கரே நடவடிக்கை எடுக்க அதிகாரம் வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதேபோல எந்த கட்சியினரும் சிவசேனாவின் பெயர், பால் தாக்கரேவின் பெயரை பயன்படுத்தக்கூடாது உள்ளிட்ட 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக கூட்டத்தில் பேசிய உத்தவ் தாக்கரே, உங்களுக்கு (அதிருப்தி எம்.எல்.ஏ.க்கள்) தைரியம் இருந்தால் தேர்தலில் உங்கள் தந்தையின் பெயரை கூறி வாக்கு கேளுங்கள் என்று கடுமையாக தாக்கினர். இதேபோல ஆதித்ய தாக்கரே பேசுகையில், " தற்போது உண்மைக்கும், பொய்யுக்கும் போராட்டம் நடக்கிறது. இதில் உண்மை வெற்றி பெறும் " என்றார்.


Next Story