மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி காவலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு


மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; பள்ளி காவலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் - சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 26 Sept 2023 1:00 AM IST (Updated: 26 Sept 2023 1:01 AM IST)
t-max-icont-min-icon

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

தானே,

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி காவலாளிக்கு 5 ஆண்டு கடுங்காவல் தண்டனை விதித்து சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

பாலியல் தொல்லை

தானே மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி பள்ளியில் காவலாளியாக பணிபுரிந்து வந்தவர் விகாஷ் சங்கர்(வயது35). அங்கு மாநகராட்சி பள்ளியில் படிக்கும் 10 வயது மதிக்கத்தக்க 2 மாணவிகளை கடந்த 2016-ம் ஆண்டு தனது அறைக்கு அழைத்து சென்று பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. மேலும் அதற்கு பின்னரும் தனது செல்போனில் சில மோசமான ஆபாச வீடியோக்களை காட்டியும், கழிவறைக்கு அவர்களை பின்தொடர்ந்து சென்றும் காவலாளி அச்சுறுத்தியுள்ளார். இது குறித்து அறிந்த சிறுமிகளின் பெற்றோர் காவலாளி மீது போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் பாலியல் தொல்லையில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் போக்சோ சட்டத்தின் கீழ் பள்ளி காவலாளி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.

கடுங்காவல்

இவர் மீதான விசாரணை சிறப்பு கோர்ட்டில் நடைபெற்றது. 11 சாட்சிகளிடம் விசாரிக்கப்பட்டது. இதற்கிடையே வழக்கு விசாரணையின்போது பாதிக்கப்பட்ட சிறுமி ஒருவர் இறந்துவிட்டார். இந்த நிலையில் வழக்கில் தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு, குற்றம் நிரூபணமானதை அடுத்து விகாஷ் சங்கருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.


Next Story