6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை - 72 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை
மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த 72 வயது முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டணை விதிக்கப்பட்டது.
மும்பை,
மும்பை அண்டாப்ஹில் பகுதியை சேர்ந்த 6 வயது சிறுமி. கடந்த 2020-ம் ஆண்டு தனது சகோதரனுடன் வீட்டின் அருகே உள்ள தோட்டத்தில் விளையாடி கொண்டிருந்தாள். அப்போது மழை பெய்ததால் அருகே உள்ள கொட்டகையில் ஒதுங்கினர். தோட்டத்தில் வேலை பார்த்து வந்த 72 வயது முதியவர் சிறுமியை தனது மடியில் அமர்த்தி பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதனால் பயந்து போன சிறுமி பெற்றோரிடம் நடந்த சம்பவத்தை தெரிவித்தாள். இதன்படி முதியவரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் சிறப்பு கோர்ட்டில் போலீசார் வழக்கு தொடர்ந்தனர். விசாரணை நிறைவில் முதியவர் மீதான குற்றம் நிரூபணமானது. இதனை தொடர்ந்து அவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story