போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பியோட்டம்


போலீஸ் பிடியில் இருந்து கைதி தப்பியோட்டம்
x

பால்காில் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓடிய கைதியை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

மாவட்ட செய்திகள்

வசாய்,

பால்கர் மாவட்டத்தில் கடந்த மாதம் 25-ந்தேதி நடந்த கொலை சம்பவத்தில் தொடர்பு இருப்பதாக விஜய் சவுத்ரி (வயது29) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரை ஒரு வழக்கு தொடர்பாக விசாரணைக்காக நாசிக் கொண்டு செல்ல நேற்று முன்தினம் போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். மோக்டா தாலுகா அருகே வரும் போது வேன் பழுதாகி நடுவழியில் நின்றது.

இதனால் வேனில் இருந்த போலீசார் மற்றும் விசாரணை கைதி விஜய் சவுத்ரி கீழே இறங்கினர். அப்போது போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து விட்டு விசாரணை கைதி விஜய் சவுத்ரி அங்கிருந்து தப்பி சென்றார். இவரை பிடிக்க முடியாமல் போனதால் போலீசார் அவர் மீது மற்றொரு வழக்கு பதிவு செய்து வலைவீசி தேடி வருகின்றனர்.


Next Story