சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உறுதி செய்வேன்- சரத்பவார் பேட்டி


சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உறுதி செய்வேன்- சரத்பவார் பேட்டி
x
தினத்தந்தி 8 March 2023 12:15 AM IST (Updated: 8 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உறுதி செய்வேன் என சரத்பவார் கூறினார்.

மும்பை,

சட்டசபை, நாடாளுமன்ற தேர்தலில் மகாவிகாஸ் அகாடி கூட்டணியை உறுதி செய்வேன் என சரத்பவார் கூறினார்.

வேட்பாளர் சந்திப்பு

மராட்டியத்தில் கடந்த மாதம் நடந்த கஸ்பா பேத் தொகுதி இடைத்தேர்தலில் மகாவிகாஸ் கூட்டணி சார்பில் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகர் வெற்றி பெற்றார். 28 ஆண்டுகள் பா.ஜனதா வசம் இருந்த அந்த தொகுதியை காங்கிரஸ் கைப்பற்றி உள்ளது.

கஸ்பா பேத்தில் வெற்றி பெற்ற காங்கிரஸ் வேட்பாளர் ரவீந்திர தன்கேகர் நேற்று முன்தினம் தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை சந்தித்தார்.

உறுதி செய்வேன்

இந்த சந்திப்புக்கு பிறகு பத்திரிகையாளர்களிடம் சரத்பவார் கூறியதாவது:-

மகாவிகாஸ் கூட்டணி தொடர்ந்து நீடிப்பதை எனது முயற்சியின் மூலம் உறுதி செய்வேன். மகாவிகாஸ் கூட்டணி சட்டசபை, நாடாளுமன்ற தேர்தல்களை ஒன்றாக சந்திக்கும். உள்ளாட்சி தேர்தல்களிலும் கூட்டணி அமைத்து போட்டியிடுவது குறித்து எங்கள் கட்சி மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

சமீபத்தில் பல இடங்களுக்கு சென்றேன். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறேன். அப்போது பொதுமக்கள் மகாவிகாஸ் கூட்டணி தொடர்ந்து ஒன்றாக இருக்க வேண்டும் என தெரிவித்தனர். இது தான் மக்களின் நிலைப்பாடாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.



Next Story