ஆட்சி அதிகாரத்துக்காக பா.ஜனதா எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை அம்பலப்படுத்தினேன் - சரத்பவார் பேட்டி
பா.ஜனதா ஆட்சி அதிகாரத்துக்காக எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை அம்பலப்படுத்தினேன் என சரத்பவார் கூறியுள்ளார்.
மும்பை,
பா.ஜனதா ஆட்சி அதிகாரத்துக்காக எந்த எல்லை வரையும் செல்லும் என்பதை அம்பலப்படுத்தினேன் என சரத்பவார் கூறியுள்ளார்.
பட்னாவிஸ் பதவி ஏற்றது ஏன்?
துணை முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், 2019-ல் சரத்பவார் பா.ஜனதாவுடன் சேர்ந்து ஆட்சி அமைக்க ஒப்புக்கொண்டு, பின்னர் பின்வாங்கிவிட்டார் என கூறியது தொடர்பாக சரத்பவார் கூறியதாவது:- பா.ஜனதா தலைவர், தேசியவாத காங்கிரஸ் தலைவர்களை சந்தித்து பேசியது உண்மை தான். ஆனால் 2 நாட்களுக்கு முன் நான் எனது முடிவை மாற்றிவிட்டேன் என பட்னாவிஸ் கூறியுள்ளார். நான் எனது முடிவை மாற்றிவிட்ட பிறகு, அவர் முதல்-மந்திரியாக பதவி ஏற்க காரணம் என்ன?. அதுவும் அதிகாலை நேரத்தில் ஏன் செய்ய வேண்டும்?. பட்னாவிஸ், அஜித்பவாருக்கு தேசியவாத காங்கிரஸ் ஆதரவு இருந்ததா?.
கூக்லி போட தெரியும்
பா.ஜனதா ஆட்சி அதிகாரத்துக்காக எந்த எல்லை வரை செல்கிறார்கள் என்பதை மக்களிடம் அம்பலப்படுத்தவே சில விஷயங்கள் செய்யப்பட்டது. அவர்களால் ஆட்சி அதிகாரம் இல்லாமல் உயிர் வாழ முடியாது என்பதை காட்ட வேண்டிய அவசியம் இருந்தது. எனது மாமனார் (சாது ஷிண்டே) 'கூக்லி' பந்து வீசக்கூடிய திறமை கொண்டவர். நானும் ஐ.சி.சி. சேர்மனாக இருந்து உள்ளேன். எனவே கிரிக்கெட் விளையாடாமல் எந்த நேரத்தில், எங்கு 'கூக்லி' பந்து போட வேண்டும் என்று எனக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.