டீ கடையில் தீ; கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறின - தீயணைப்பு வீரர் காயம்
டீ கடையில் தீ விபத்து ஏற்பட்டு கியாஸ் சிலிண்டர்கள் வெடித்து சிதறியது. தீயனைப்பு வீரர் ஒருவர் காயமடைந்தார்
தானே,
தானே மாவட்டம் திவா கார்டி கிராமத்தில் உள்ள டீ கடையில் நேற்று அதிகாலை 2.50 மணி அளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்தில் அங்கிருந்த 2 கியாஸ் சிலிண்டர்கள் மீது தீ பற்றியது. இதனால் சிலிண்டர்கள் வெடித்து சிதறின. இந்த விபத்தினால் கடையில் தீ பரவி கொழுந்து விட்டு எரிய தொடங்கியது. தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் கடையில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது 30 வயது தீயணைப்பு படை வீரர் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்ட மற்ற வீரர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடையில் பற்றிய தீயை அதிகாலை சுமார் 3.15 மணி அளவில் வீரர்கள் கட்டுக்குள் கொண்டு வந்தனர். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.