கடும் விலையேற்றம் எதிரொலி: துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்த பெண்


கடும் விலையேற்றம் எதிரொலி: துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் 10 கிலோ தக்காளியை கொண்டு வந்த பெண்
x
தினத்தந்தி 21 July 2023 1:30 AM IST (Updated: 21 July 2023 1:30 AM IST)
t-max-icont-min-icon

கடும் விலையேற்றத்தால் துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் 10 கிலோ தக்காளியை பெண் ஒருவர் கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.

மும்பை,

கடும் விலையேற்றத்தால் துபாயில் இருந்து மும்பைக்கு விமானத்தில் 10 கிலோ தக்காளியை பெண் ஒருவர் கொண்டு வந்த சம்பவம் நடந்துள்ளது.

தக்காளி விலை ஏற்றம்

இந்தியர்களின் உணவில் தக்காளி முக்கியமான இடத்தை பெற்றுள்ளது. சமீபநாட்களாக மும்பை உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு நகரங்களில் தக்காளியின் விலை அதிகரித்து வருகிறது. இதனால் பொதுமக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். தக்காளியை சமையலுக்கு குறைவாகவே பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்போது பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிக்கூடங்களுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்கள் பலர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

மும்பைக்கு கொண்டு வந்தார்

துபாயில் வசித்து வரும் மராட்டியத்தை சேர்ந்த ரேவ் என்ற பெண் தனது தாயாரிடம் ஊருக்கு புறப்பட்டு வருவதாகவும் என்ன பொருட்கள் வாங்கி வர வேண்டும் எனவும் கேட்டார். அதற்கு அவரது தாயார் இந்தியாவில் தக்காளி விலை அதிகமாக இருக்கிறது, எனவே 10 கிலோ தக்காளியை கொண்டு வருமாறு கூறினார். தாயாரின் கோரிக்கையை ஏற்று ரேவ் துபாயில் உள்ள காய்கறி கடையில் 10 கிலோ தக்காளியை வாங்கினார். பின்னர் அவர் தக்காளியை பாதுகாப்பாக அட்டை பெட்டியில் அடைத்தார். தொடர்ந்து அப்பெண் விமானத்தில் தக்காளியை மும்பைக்கு கொண்டு வந்தார். துபாயில் ஒரு கிலோ தக்காளி சராசரியாக ரூ.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த தகவலை ரேவ்வின் சகோதரி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்து இந்திய தூதரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அமீரகத்தில் இருந்து இந்தியாவுக்கு பழங்கள், காய்கறிகள் மற்றும் அதன் விதைகள் கொண்டு செல்வதில் சில கட்டுப்பாடுகள் இருந்து வருகின்றன. அதனை பின்பற்றி பொதுமக்கள் செயல்பட வேண்டும் என கூறப்பட்டுள்ளது.


Next Story