மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமனம்


மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமனம்
x

மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை,

மாநகராட்சி தேர்தல் நெருங்கும் நிலையில் மும்பை பகுதிக்கு ஷிண்டே அணி நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

புது முகங்களுக்கும் வாய்ப்பு

மும்பை மாநகராட்சி தேர்தல் நெருங்கி வருகிறது. இந்தநிலையில் ஏக்நாத் ஷிண்டே அவரது அணிக்கான மும்பை நிர்வாகிகளை நியமித்து உள்ளார். இதில் பல புதிய முகங்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இதேபோல எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முன்னாள் கவுன்சிலர்களுக்கும் முக்கிய பொறுப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

இதன்படி முன்னாள் கவுன்சிலர் யஷ்வந்த் ஜாவத் பைகுல்லா பகுதி விபாக் பிரமுக்காக (மண்டல தலைவர்) நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் நவநிர்மாண் சேனா கவுன்சிலர் கிரிஷ் தகானுர்கர் தாதர்-மாகிம்-வடலா பகுதி விபாக் பிரமுக்காகவும், பிரியா குராவ் விபாக் ஒருங்கிணைப்பாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

குர்லா - மங்கேஷ்குடல்கர்

இதேபோல முன்னாள் எம்.எல்.ஏ. அசோக் பாட்டீல் பாண்டுப்-விக்ரோலி-முல்லுண்டு பகுதி விபாக் பிரமுக்காகவும், ராஜஸ்ரீ மாந்த்வில்கர் ஒருங்கிணைப்பாளராகவும் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இதுதவிர மங்கேஷ் குடல்கர் எம்.எல்.ஏ. - குர்லா, திலீப் நாயக் - கொலபா, அவினாஷ் ரானே - செம்பூர், சயான், அணுசக்திநகர், மகாதானே எம்.எல்.ஏ. பிரகாஷ் சுர்வே - மேற்கு புறநகர் பகுதி விபாக் பிரமுக்காக நியமிக்கப்பட்டுள்ளனர்.

மும்பை மாநகராட்சிக்குள் கட்சியை பலப்படுத்த புதிய நிர்வாகிகளுக்கு ஏக்நாத் ஷிண்டே உத்தரவிட்டுள்ளார்.


Next Story