ஆதரவற்றோர் இல்லத்தில் ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை


ஆதரவற்றோர் இல்லத்தில் ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க முயற்சி - 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 22 Jun 2023 1:45 AM IST (Updated: 22 Jun 2023 1:45 AM IST)
t-max-icont-min-icon

ஆதரவற்றோர் இல்லத்தில் ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க நடந்த முயற்சியை போலீசார் முறியடித்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

அவுரங்காபாத்,

ஆதரவற்றோர் இல்லத்தில் ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்துக்கு விற்க நடந்த முயற்சியை போலீசார் முறியடித்தனர். இது தொடர்பாக 3 பேரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

விற்க முயற்சி

அவுரங்காபாத் பைதான் பகுதியில் செயல்பட்டு வரும் ஆதரவற்றோர் இல்லத்தில் ஒரு தம்பதிக்கு ஆண் குழந்தை விற்பனை செய்ய திட்டமிட்டு இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்து. இதையடுத்து போலீசார் அங்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இதில் 2 மாதமே ஆன ஆண் குழந்தையை ரூ.5 லட்சத்திற்கு விற்பனை செய்ய ஆதரவற்றோர் இல்லத்தை சேர்ந்தவர்கள் திட்டமிட்டது வெளிச்சத்துக்கு வந்தது. இதையடுத்து போலீசார் ஆதரவற்றோர் இல்லத்தில் இருந்த குழந்தையை மீட்டு குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

3 பேரிடம் விசாரணை

மேலும் அந்த குழந்தையை ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்த பெண்ணை பிடித்து விசாரணை நடத்தினர். இதில் அவர் தனது குழந்தையை தத்து கொடுப்பதற்காக பைதானை சேர்ந்த ஆதரவற்றோர் இல்லத்தில் ஒப்படைத்ததாக கூறினார். இருப்பினும் அவர் கூறுவது உண்மைதானா அல்லது குழந்தை எங்கிருந்தாவது கடத்தப்பட்டதா என்பதை கண்டறிய போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு உள்ளனர். அதுமட்டும் இன்றி ஆதரவற்றோர் இல்லத்தை நடத்தும் தம்பதியையும், குழந்தையை ஒப்படைத்த பெண்ணையும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றுள்ளனர். முதல்கட்ட விசாரணையில் ஆதவற்றோர் இல்லம் சட்டப்பூர்வமாக தத்தெடுப்பை மேற்கொள்ள போதுமான அனுமதி எதையும் பெறவில்லை என தெரிகிறது. இதுகுறித்தும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story