ராய்காட்டில் 150 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 3 வாலிபர்கள் பலி


ராய்காட்டில் 150 அடி பள்ளத்தில் கார் பாய்ந்து 3 வாலிபர்கள் பலி
x

ராய்காட்டில் 150 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 வாலிபர்கள் பலியானார்கள்.

மும்பை,

ராய்காட்டில் 150 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து 3 வாலிபர்கள் பலியானார்கள்.

பள்ளத்தில் கவிழ்ந்த கார்

வாஷிம் மாவட்டத்தை சேர்ந்த வாலிபர்கள் 6 பேர் காரில் கொங்கன் பகுதிக்கு சுற்றுலா வந்தனர். அவர்கள் சம்பவத்தன்று ராய்காட் மாவட்டம் மான்காவ்- புனே இடையே உள்ள மலைப்பாதையில் சென்று கொண்டு இருந்தனர். இதில் தாம்கினி மலை பகுதியில் கார் சென்றபோது, திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்தது. தறிகெட்டு ஓடிய கார் சாலையோரம் இருந்த 150 அடி ஆழ பள்ளத்தில் பாய்ந்தது.

இந்த பயங்கர விபத்தில் கார் 2 துண்டாக உடைந்து அடையாளம் காண முடியாத அளவுக்கு நொறுங்கியது. மேலும் அதில் இருந்த 6 வாலிபர்களும் காரில் இருந்து தூக்கிவீசப்பட்டு படுகாயமடைந்தனர்.

3 வாலிபர்கள் பலி

தகவல் அறிந்து மான்காவ் போலீசார் விரைந்து சென்றனர். இதில் அவர்கள் 6 வாலிபர்களையும் மீட்டு அருகில் உள்ள ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அப்போது ரிஷப் சவான், சவுரப் ஹிங்கே, கிருஷ்ணா ரதோட் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியானது தெரியவந்தது. மற்ற 3 பேருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து போலீசாா் காரை ஓட்டிச்சென்ற ரோஷன் (26) மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

---------------


Next Story