சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதான விவகாரம் காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்


சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதான விவகாரம்  காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போலீஸ் கமிஷனரிடம் புகார்
x

சாம்ராஜ்பேட்டை ஈத்கா மைதான விவகாரம் குறித்து காங்கிரஸ் எம்.எல்.ஏ. மீது போலீஸ் கமிஷனரிடம் புகார் அளிக்கப்ட்டுள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சாம்ராஜ்பேட்டையில் உள்ள ஈத்கா மைதானம் அரசு சொந்தமானது என்று அறிவிக்கப்பட்டு உள்ள நிலையில் அந்த மைதானத்தில் சுதந்திர தின விழா, விநாயகர் சதுர்த்தி கொண்டாட சில அமைப்புகள் முடிவு செய்து உள்ளன. இந்த நிலையில் ஈத்கா மைதானத்தை கஷ்டப்பட்டு அமைத்து உள்ளோம் என்றும் அங்கு விநாயகர் சதுர்த்தி கொண்டாட விடமாட்டோம் என்றும் சாம்ராஜ்பேட்டை தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜமீர் அகமதுகான் கூறியதாக தெரிகிறது. இந்த நிலையில் இருசமூகத்தினர் இடையே மோதலை ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ. மீது பெங்களூரு போலீஸ் கமிஷனர் பிரதாப் ரெட்டியிடம், ஸ்ரீராமசேனை அமைப்பினர் நேற்று புகார் மனு அளித்தனர்.


Next Story