மழை பாதிப்பு விவர அறிக்கையை வருகிற 27-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்-கலெக்டர் அஸ்வதி உத்தரவு


மழை பாதிப்பு விவர அறிக்கையை வருகிற 27-ந் தேதிக்குள் சமர்பிக்கவேண்டும்-கலெக்டர் அஸ்வதி உத்தரவு
x

மண்டியாவில் மழை பாதிப்பு விவர அறிக்கையை வருகிற 27-ந் தேதி சமர்பிக்கவேண்டும் என்று கலெக்டர் அஸ்வதி உத்தரவிட்டுள்ளார்.

மண்டியா:

கர்நாடகத்தில் கடந்த 2 மாதங்களாக பெய்து வரும் மழையால் ஏராளமான விவசாயம் நிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளது. சாலைகள், மேம்பாலங்கள் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. அந்த இடங்களை சீரமைக்கும் பணியில் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் மண்டியா மாவட்டத்தில் ஏற்பட்ட மழை பாதிப்பு மற்றும் நிவாரணத்தொகை வழங்குவது குறித்த ஆலோசனை கூட்டம் கே.ஆர். பேட்டை தாலுகா சிக்கனஹள்ளி பட்டு பயிற்சி மையத்தில் நடந்தது. இதில் விளையாட்டுத்துறை மந்திரி கே.சி.நாராயணகவுடா, மாவட்ட கலெக்டர் அஸ்வதி ஆகியோர் கலந்து கொண்டு மழை பாதிப்பு மற்றும் சீரமைப்பு பணிகள், நிவாரணத்தொகை வழங்குவது குறித்து ஆலோசனை நடத்தினர். பின்னர் அதிகாரிகளுடன் பேசிய கலெக்டர் அஸ்வதி கூறியதாவது:-

மண்டியாவில் பல கிராமங்களில் பொதுமக்கள் வீடு இல்லாமல் தவித்து வருகின்றனர். அவர்களை அடையாளம் கொள்வதற்காக கிராம சபை கூட்டங்கள் நடத்து வேண்டும். பின்னர் அவர்களுக்கு வீடுகள் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டும். செப்டம்பர் 10-ந் தேதிக்கு இந்த பணிகளை முடித்திருக்கவேண்டும். மழை பாதிப்பு குறித்த விவர அறிக்கையை வருகிற 27-ந் தேதிக்குள் மாவட்ட நிர்வாகத்திடம் சமர்பிக்கவேண்டும் என்றார்.


Next Story