ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது; கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு


ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது;  கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
x

பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை சம்பவங்களில் ஆசிரியருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

பெங்களூரு:

சிக்கமகளூரு மாவட்டம் என்.ஆர்.புரா டவுனில் அரசு பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வரும் ஒருவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் அந்த ஆசிரியர் மீது 14 புகார்கள் பதிவாகி இருந்தன. அந்த புகார்களின்பேரில் ஆசிரியர் மீது போலீசார் 14 முறை போக்சோவில் வழக்குப்பதிவு செய்தனர் ஆனால் ஒரே காரணத்திற்காக தன் மீது 14 வழக்குகளை போலீசார் பதிவு செய்தது தவறு என்றும், இதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் கர்நாடக ஐகோர்ட்டில் ஆசிரியர் மனு தாக்கல் செய்தார்.

அந்த மனுவை நீதிபதி நாகபிரசன்னா விசாரித்து வந்தார். மனுவின் இறுதி விசாரணையின் போது நீதிபதி கூறுகையில், முதல் தகவல் அறிக்கையில் கூறப்பட்டு உள்ள அம்சங்கள் மனுதாரர் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் தவறு செய்தார் என்று கூறவில்லை. 3 மாதங்கள் இடைவெளியில் குற்றங்கள் நடந்து உள்ளது. இதனால் மனுதாரர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்ய தடை விதிக்க முடியாது என்று கூறி நீதிபதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.


Next Story