சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: மேலும் 5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்


சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு: மேலும் 5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்
x

சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு செய்த விவகாரத்தில் மேலும் 5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம் செய்து விஜயநகர் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டுள்ளார்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டருடன் தகராறு

விஜயநகர் மாவட்டம் கொட்டூரு போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் விஜயகிருஷ்ணா. இவர், கடந்த மாதம் (மே) 14-ந் தேதி கொட்டூரு போலீஸ் நிலையத்தில் பணியாற்றும் போலீஸ்காரர்களை ரோந்து செல்லும்படி கூறினார். ஒவ்வொரு போலீஸ்காரர்களையும், ஒவ்வொரு பகுதிக்கு செல்லும்படி கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணாவுக்கும், போலீஸ்காரர் கொட்ரேகவுடாவுக்கும் இடையே வாக்குவாதம் உண்டாகி இருந்தது. இதுபற்றி விஜயநகர் போலீஸ் சூப்பிரண்டு்க்கு விஜயகிருஷ்ணா புகார் அளித்திருந்தார். இதையடுத்து, போலீஸ்காரர் கொட்ரேகவுடா பணி இடைநீக்கம் செய்யப்பட்டு இருந்தார்.

5 போலீஸ்காரர்கள் பணி இடைநீக்கம்

இந்தநிலையில், சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணாவுடன் ரோந்து செல்லும் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்திய உயர் போலீஸ் அதிகாரிகள், விஜயநகர் போலீஸ் சூப்பிரண்டிடம் அறிக்கை தாக்கல் செய்திருந்தார்கள். அந்த அறிக்கையில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயகிருஷ்ணாவுடன், கொட்ரேகவுடா தவிர மேலும் 5 போலீஸ்காரர்ககளும் ரோந்து செல்ல மறுத்து, அவருடன் தகராறு செய்திருந்ததும், சப்-இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்திருந்ததும் உறுதி செய்யப்பட்டு இருந்தது.

இதையடுதது, சப்-இன்ஸ்பெக்டர் விஜய கிருஷ்ணாவுடன் தகராறு செய்ததுடன், அவருக்கு மிரட்டல் விடுத்ததாக போலீஸ்காரர்களான குமார் பத்ரா, பசவராஜ், கவிதாபாபு, திப்பண்ணா மற்றும் கியாட பசவராஜ் ஆகிய 5 பேரையும் பணி இடைநீக்கம் செய்து விஜயநகர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருண் நேற்று அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


Next Story