மந்திரிசபையில் இருந்து அரக ஞானேந்திராவை நீக்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்


மந்திரிசபையில் இருந்து அரக ஞானேந்திராவை நீக்க வேண்டும்; சித்தராமையா வலியுறுத்தல்
x
தினத்தந்தி 5 July 2022 8:54 PM IST (Updated: 5 July 2022 8:58 PM IST)
t-max-icont-min-icon

மந்திரிசபையில் இருந்து அரக ஞானேந்திராவை நீக்க வேண்டும் என சித்தராமையா வலியுறுத்தியுள்ளார்.

பெங்களூரு:

சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேடு வழக்கில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத்பால் கைது செய்யப்பட்டது குறித்து சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் கூறி இருப்பதாவது:-

அலமாரிகளில் இருந்து எலும்புக்கூடுகள் ஒவ்வொன்றாக வெளியே விழ ஆரம்பித்து உள்ளன. இதற்கு சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் கூடுதல் டி.ஜி.பி. அம்ருத் பால் கைது செய்யப்பட்டதே சான்று. முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை, போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா இப்போது என்ன சொல்வார்கள்?. இந்த முறைகேட்டில் அதிகாரிகளை மட்டும் குறை சொல்ல வேண்டாம்.

இந்த முறைகேட்டிற்கு போலீஸ் மந்திரி அரக ஞானேந்திரா தான் பொறுப்பு. இதனால் அவரை முதலில் மந்திரிசபையில் இருந்து முதல்-மந்திரி நீக்க வேண்டும். சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு முறைகேட்டில் ஒரு மந்திரி, முன்னாள் முதல்-மந்திரியின் மகன் ஈடுபட்டதாக கூறப்படும் நிலையில் மக்களின் கவனத்தை திசை திருப்ப எங்கள் கட்சியை சேர்ந்த ஜமீர் அகமதுகான் எம்.எல்.ஏ.வின் வீடு, அலுவலகங்களில் ஊழல் தடுப்பு படை சோதனை நடத்தி உள்ளது. அரசியல் உள்நோக்கம் கொண்ட இந்த சோதனையை நான் கண்டிக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story