சாக்லெட் தருவதாக கூறி அழைத்து சென்று 4 வயது சிறுமி பலாத்காரம் ; கட்டிட தொழிலாளி கைது


சாக்லெட் தருவதாக கூறி அழைத்து சென்று 4 வயது சிறுமி பலாத்காரம் ; கட்டிட தொழிலாளி கைது
x

சாக்லெட் தருவதாக கூறி அழைத்து சென்று 4 வயது சிறுமி பலாத்காரம் செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு எலகங்கா நியூ டவுன் பகுதியில் ஒரு தம்பதி வசித்து வருகின்றனர். இந்த தம்பதிக்கு 4 வயதில் மகள் உள்ளாள். இந்த நிலையில் சிறுமியின் வீட்டின் அருகே புதிதாக கட்டிடம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணியில் வடகர்நாடகத்தை சேர்ந்த 20 வயது கட்டிட தொழிலாளி ஒருவர் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில் சிறுமி வீட்டின் முன்பு நின்று விளையாடி கொண்டு இருந்தாள். அப்போது அங்கு வந்த கட்டிட தொழிலாளி சாக்லெட் தருவதாக கூறி சிறுமியை ஆள்நடமாட்டம் இல்லாத இடத்திற்கு அழைத்து சென்று பலாத்காரம் செய்துவிட்டு தப்பி சென்றதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் சம்பவம் குறித்து சிறுமி அழுதபடி தனது பெற்றோரிடம் கூறியுள்ளாள். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் பெற்றோர் எலகங்கா நியூ டவுன் போலீசில் புகார் அளித்தனர். அந்த புகாரின்பேரில் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் கட்டிட தொழிலாளியை கைது செய்தனர். அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.


Next Story