காவி வண்ணத்தை கண்டு காங்கிரஸ் பயப்படுவது ஏன்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி


காவி வண்ணத்தை கண்டு காங்கிரஸ் பயப்படுவது ஏன்?; முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பேட்டி
x
தினத்தந்தி 15 Nov 2022 12:15 AM IST (Updated: 15 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

காவி வண்ணத்தை கண்டு காங்கிரஸ் பயப்படுவது ஏன்? என்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை கேள்வி எழுப்பி உள்ளார்.

பெங்களூரு:

மறைந்த முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் பிறந்த நாளையொட்டி பெங்களூரு விதான சவுதாவில் உள்ள அவரது சிலைக்கு முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அதன் பிறகு அவா் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பள்ளி கட்டிடங்களுக்கு காவி வண்ணம் பூசப்படுகிறது. இதை காங்கிரஸ் கட்சி விமர்சிக்கிறது. எல்லாவற்றிலும் அரசியல் செய்வது காங்கிரசின் வாடிக்கை. காவி வண்ணம் நமது நாட்டின் தேசிய கொடியிலேயே உள்ளது. காவியை கண்டால் காங்கிரஸ் பயப்படுவது ஏன்?. சுவாமி விவேகானந்தா பெயரிலேயே பள்ளி கட்டிடங்களை நாங்கள் அமைக்கிறோம். அவர் சன்னியாசியாக இருந்தவர். அவர் உடுத்தி இருந்தது காவி வண்ண ஆடை ஆகும். விவேக என்றால் அனைவருக்கும் அறிவு என்று பொருள். காங்கிரசார் அதை கற்க வேண்டும்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story