இளம்பெண்ணிடம் ரூ.8¼ லட்சம் மோசடி
இளம்பெண்ணிடம் ரூ.8¼ லட்சம் மோசடி நடந்துள்ளது.
பெங்களூரு: சஞ்சீவினி நகரை சேர்ந்தவர் தேஜுஸ்ரீ(வயது 21). இவரது செல்போனுக்கு ஆன்லைன் மூலமாக பொருட்கள் விற்று கொடுத்தால், கமிஷன் கொடுப்பதாக கூறி ஒரு மர்மநபர் தகவல் அனுப்பினார். இதனை நம்பிய அவரும் பொருட்கள் விற்க சம்மதித்தார். இதற்காக தனது வங்கி கணக்கு பற்றிய தகவல்களை மர்மநபருக்கு, தேஜுஸ்ரீ அனுப்பி வைத்திருந்தார். இந்த நிலையில், தேஜுஸ்ரீ கொடுத்திருந்த வங்கி கணக்கின் தகவல்கள் மூலமாக, அவரது வங்கி கணக்கில் இருந்த ரூ.8.32 லட்சத்தையும் எடுத்து மர்மநபர் மோசடி செய்து விட்டார். இதுகுறித்து சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபரை தேடிவருகிறார்கள்.
Related Tags :
Next Story