திருப்பதி கோவிலில் உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடியாக உயர்வு
திருப்பதியில் கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
திருமலை,
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் 2023-2024-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை திருப்பதி தேவஸ்தானம் தயாரித்து தாக்கல் செய்துள்ளது. கொரோனாவுக்கு பிறகு உண்டியல் வருமானம் கணிசமாக அதிகரித்துள்ளது.
கொரோனாவுக்கு முன், உண்டியல் வருமானம் ஆண்டுக்கு ரூ.1,200 கோடியாக இருந்தது. தற்போது உண்டியல் வருமானம் ரூ.1,500 கோடி வரை உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் உளுந்தூர்பேட்டையில் காணிக்கையாளர்களின் காணிக்கையில் ரூ.4.70 கோடியில் வெங்கடாசலபதி கோவில் கட்ட முடிவு செய்துள்ளோம். மேற்கண்ட விவரங்களை அறங்காவலர் குழு தலைவர் ஒய்.வி.சுப்பாரெட்டி தெரிவித்தார்.
Related Tags :
Next Story