திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாத உண்டியல் வருமானம் ரூ.123 கோடி


திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஜனவரி மாத உண்டியல் வருமானம் ரூ.123 கோடி
x

உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள்

திருமலை,

ஆந்திராவில் கொரோனா தொற்று இயல்பு நிலைக்குத் திரும்பியதை அடுத்து, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. உண்டியல் காணிக்கையும் குவிந்து வருகிறது.

இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் உண்டியல் வருமானம் ரூ.123 கோடி கிடைத்துள்ளது. அதில் ஜனவரி மாதம் 2-ந்தேதி ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.7 கோடியே 68 லட்சம் கிடைத்தது. இது, தேவஸ்தான வரலாற்றில் அதிகமாகும்.

உண்டியல் வருமானத்தைபோல் ஏழுமலையானுக்கு இதர காணிக்கைகளும் பெரிய அளவில் பக்தர்கள் செலுத்தி வருகிறார்கள். அதில் கிலோ கணக்கில் தங்கத்தை பக்தர்கள் பிரதான உண்டியலில் காணிக்கையாகச் செலுத்துவது தொடர்கிறது.

கொரோனா தொற்று பரவல் காலத்தில் உண்டியல் வருமானம் மிகக் குறைவாக இருந்தது. தற்போது நாளுக்குநாள் உண்டியல் வருமானம் அதிகரித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

கோவிலில் நேற்று முன்தினம் 60 ஆயிரத்து 939 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். 20 ஆயிரத்து 203 பக்தர்கள் தலைமுடி காணிக்கை செலுத்தினர். அன்று ஒருநாள் உண்டியல் வருமானமாக ரூ.5 கோடியே 17 லட்சம் கிடைத்ததாக, கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story